சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சி

காஞ்சிபுரம், ஜூன் 19:  காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரை அடுத்த ஆதனஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து தடுப்புச்சவர் எழுப்புவதை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த ஆதனஞ்சேர் கிராமத்தில் கீழண்டை மாடவீதியில் சாலையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர், சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சிக்கிறார். அருகில் உள்ள பட்டா இடத்தை கிரயம் பெற்றதால் கிழக்கு பக்கமாக உள்ள கால்வாய் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலையையும் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சிக்கிறார்.அந்த சாலை, அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் திருவிழா நடக்கும்போது, தடை ஏற்படாமல் இருக்க  ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலையை உடைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.எனவே, சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பும் முயற்சியை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

Tags : road ,
× RELATED ஆட்டையாம்பட்டியில் சாலையோரம் கிடைக்கும் கல்லால் விபத்து அபாயம்