உத்திரமேரூர் அருகே 647 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர், ஜூன் 19:  உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில் 647 ஏழை எளிய மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.உயிர் பவுன்டேஷன் இயக்குனர்  செலின்ரூபினின் தலைமை தாங்கினார். மேளாளர் கிரிஸ்டீனா ஜஸ்டின், சைட்டில்  நிறுவன இயக்குனர் சுரேஷ்குமார், மனிதவள மேம்பாட்டுதுறை அலுவலர் மேரிஜார்ஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திட்ட ஒருங்கிணைப்பாளர் அரங்கநாதன் வரவேற்றார்.

ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கேசவேலு கலந்து கொண்டு, உத்திரமேரூர் ஒன்றியத்தில் அடங்கிய  திருப்புலிவனம், மணல்மேடு, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், வெங்கச்சேரி உள்பட 20 கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்தை  சேர்ந்த 647 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பேக், நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில், ஜாமின்ட்ரிபாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார்.மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இடையே பாட்டு, பேச்சு, விளையாட்டு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும்  நடந்தன.

× RELATED கல்லூரி மாணவர்கள் பேரணி