பல லட்சம் ேமாசடி இளம்பெண் கைது

உத்திரமேரூர், ஜூன் 19:உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (35). உத்திரமேரூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சுமதி (25) என்பவரிடம் ₹90 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார்.  பின்னர், கொடுத்த கடன்  தொகையை சுமதியிடம் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சுமதி, பணத்தை திரும்ப தர மறுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வகுமார், உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 அதில், செல்வகுமாரிடம் பணத்தை வாங்கி சுமதி மோசடி செய்தது தெரிந்தது. மேலும் விசாரணையில், இதேபோல் பலரிடம் கடனாக வாங்கி, பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுமதியை கைது செய்தனர்.  பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED கொள்ளிடம் ஆற்றில் மர்மநபர்களால்...