×

ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வருவது எப்போது?: கட்டுமான சங்கத்தினர் கேள்வி


சென்னை: அரசால் தமிழ்நாடு  ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டது. இதன்பிறகு 9 மாதங்கள் ஆகியும் இந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு  அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மணி சங்கர் கூறிதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகள் 2019 கடந்த பிப்.4ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. 9 மாத காலமாகியும் அதனை நடைமுறை படுத்தாமல் அரசு தாமதம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும்,  துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் பலனளிக்கவில்லை.

இந்த சட்டத்தின் வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றிய அளவில் மிகப்பெரிய அதிகாரம் கிடைக்கும். அதன் மூலம் அதிகதாமதம் சீரான முறையில்  பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே சீரான விதிகள்படி கட்டிட அனுமதி வழங்குவதன் மூலம் கட்டுமானதுறை மிகபெரிய எழுச்சி பெறவிருந்தது. ஆனால் இந்த வரைவு சட்டத்தை நடைமுறை படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதன்  மூலம் நடுத்தர மக்கள் மற்றும் சிறு கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வீடு மற்றும் பிளாட்டுகளின்  விலை 10 சதவீதம் வரை குறையும். எனவே இந்த திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுமான பணிகள் முடக்கம்
தண்ணீர் இல்லாமல் பல திட்டப் பணிகளை நிறுத்தியுள்ளோம். மிக சொற்ப தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தண்ணீர் இல்லாமல் பலர் வெளியேறி  வருகின்றனர் என்பதுதான் உண்மை.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...