மாணவியிடம் செல்போன் பறிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த ரமேஷ் மகள் புனிதவள்ளி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை யோகா வகுப்பு செல்ல திருவொற்றியூர்,  சத்தியமூர்த்தி நகர் அருகே  தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், புனிதவள்ளி கையில் இருந்த  விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தாங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : student ,
× RELATED சென்னையில் பேருந்து படிக்கட்டில்...