வரும் 27ம் தேதி நடக்கிறது தபால் குறைதீர் முகாம்

சென்னை: வரும் 27ம் தேதி தபால் குறைதீர் முகாம் நடைபெறும் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது.சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலக தலைமை அஞ்சல் அதிகாரி கே.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கை:மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகள் பெறும் பொதுமக்கள் சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகமோ, இ-மெயில் மூலமாகவோ வரும் 24ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். தபால் மூலம்  குறைகளை தெரிவிக்க விரும்புவோர் ‘‘தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை -600002’’ என்ற முகவரிக்கு ‘‘குறைதீர்வு முகாம்’’ என்ற தலைப்பில் கடிதம் அனுப்ப வேண்டும்.

இ-மெயில் மூலம் குறைகளை தெரிவிக்க விரும்புவோர் doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு ‘‘குறைதீர்வு முகாம்’’ என்று குறிப்பிட்டு இ-மெயில் அனுப்ப வேண்டும். வரும் அதேபோல், 27ம் தேதி மாலை 4 மணிக்கு  அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் தபால் குறைதீர் முகாமிலும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : camp ,
× RELATED கோமாரிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்