×

பிளஸ்2 ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் துவக்கம் புதிய பாடத்தை மாணவர்கள் புரியும்படி கற்று தர வேண்டும்

நெல்லை, ஜூன் 19: புதிய பாடத்திட்டத்தை உள்வாங்கி மாணவர்கள் புரியும் வகையில் கற்றுக்கொடுக்கவேண்டும் என நெல்லையில் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டபயிற்சி முகாமை துவக்கி வைத்து முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ் பேசினார்.நடப்பு கல்வியாண்டில்(2019-20)  மாற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரிய பயிற்றுனர்களாக தலா 3 பேர் ஒவ்வொரு பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த வாரம் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மாவட்ட அளவில் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், நேற்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கியது. நெல்லையில் இப்பயிற்சி முகாமை முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ் துவக்கி வைத்துப் பேசியதாவது, புதிய பாடத்திட்டங்கள் மிகவும் தரம் மிக்கதாக தயாரிக்கப்பட்டுள்ளது. பாடங்கள் மட்டுமின்றி அதற்கும் மேல் சிந்தனையைத் தூண்டும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. புராதன தமிழ் குறித்தவை தமிழ் விளக்க படங்கள் மற்றும் குறிப்புகளுடன் பிளஸ்2 ஆங்கில புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இதுபோல் மாணவர்கள் சிந்தனை திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாடத்திட்டங்கள் எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்வியை எளிதாக புரிந்து பயிலவும் உதவும். எனவே இப்பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் நன்றாக உள்வாங்கி தேவையான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள். பின்னர் மாணவர்கள் நன்றாக புரிந்து கற்கும் வகையில் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்யமுடியும். ெமல்ல கற்கும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும், என்றார்.

முதற்கட்டமாக ஆங்கிலம், வேதியியல் பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 80 ஆசிரியர்கள் வீதம் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து அந்தந்த பாடங்களுக்கு தலா 2 நாட்கள் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. நெல்லையில் நடைபெறும் பயிற்சி முகாம் ஏற்பாடுகளை முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் கோல்டா கிரினா ராஜாத்தி செய்துள்ளார்.ஆங்கிலம் புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், பாடத்திட்டம் மிகவும் உயர்தரம் மிக்கதாக உள்ளது. மாணவர்களின் கிரியேட்டிவ் திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. எங்கும் தமிழ், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற முழக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழர் தொன்மை வரலாறுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஓலைச்சுவடியில் வடிவமைக்கப்பட் தொல்காப்பியம், தொன்மைத்தமிழின் பெருமைகள், வரலாறு போன்ற புதிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இது தமிழின் பெருமை வரலாறுகளை ஆங்கிலப்பாடம் மூலமும் கற்றுக்கொள்ளும் வாய்ப்ைப ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

Tags : teachers ,training camps ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...