விளாத்திகுளம் வைப்பாற்று குடிநீர் ஊற்றில் சின்னப்பன் எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம், ஜூன் 19: விளாத்திகுளம் வைப்பாற்றில் குடிநீர் ஊற்றை சின்னப்பன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விளாத்திகுளத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் வைப்பாற்றில் ஊற்று தோண்டி கிடைக்கப்பெற்ற குடிநீரை பயன்படுத்தினர்.

இதுகுறித்து தெரியவந்த பேரூராட்சி நிர்வாகம்  ஊற்றை இடித்து அகற்றினர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் மூடப்பட்ட இடத்தில் மீண்டும் குடிநீர் ஊற்று தோண்டுமாறு வேண்டுகோள்  விடுத்தனர்.  இதனை ஏற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மீண்டும் ஊற்று  ேதாண்டியது. இதையடுத்து சின்னப்பன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர் தனசிங் மற்றும் அதிகாரிகள் குடிநீர் ஊற்றை பார்வையிட்டு அதை விரிவு செய்வது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்போது ஊற்றில் உள்ள குடிநீரை பருகிய எம்.எல்.ஏ.விடம், இதுபோன்ற கூடுதலாக ஊற்றுகள் அமைக்குமாறு மக்கள் கோாிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்  இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: