×

புதுக்கோட்டை அருகே மது விற்றவர் கைது

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை எஸ்.ஐ. மாதவராஜா மற்றும் போலீசார் கூட்டாம்புளி அருகே ரோந்து சென்றனர். அப்போது போடம்மாள்புரம் பஸ் நிறுத்தம் அருகே பண்டாரவிளையைச் செர்ந்த சண்முகவேல் (86) என்பவர் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 27 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Alappuzha ,Puthukkottai ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!