×

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் உரிமம் ரத்து தாசில்தார் எச்சரிக்கை இ-சேவை மையத்தில் பொதுமக்களிடம்

திருப்பத்தூர், ஜூன் 19: இ-சேவை மையத்தில் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் வட்டார இ-சேவை மையத்தின் நடத்துனர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தாசில்தார் கூறியதாவது:பொதுமக்களிடம் இருந்து இ-சேவை மையத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இ-சேவை மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும், ஒரு சில இ-சேவை மையங்களில் தாசில்தார் முதல் கிராம நிர்வாக உதவியாளர் வரை சரி கட்ட வேண்டும் என்பதால் அதற்கு நீங்கள் கணிசமான தொகை தரவேண்டும் என்று கேட்பதாகவும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.இதனால், இ-சேவை மையத்தின் மீது நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். அவ்வாறு யாராவது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் வருவாய் துறை ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர் முடிவில் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...