மதுவில் விஷம் கலந்து குடித்தவர் பலி

ஈரோடு, ஜூன் 19:  புளியம்பட்டி  காவிலிபாளையம் கதர்கடை வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (58). இவரது மனைவி  தங்கமணி.இவர்களுக்கு மருதாசலம், ஆண்டமுத்து ஆகிய 2 மகன் உள்ளனர். கடந்த  சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ், புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்காக  பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்த  முடியாமல் மனமுடைந்த பிரகாஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.  இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ்,  மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட மகன்கள்  சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு  அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

Advertising
Advertising

Related Stories: