நிபா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு

ஈரோடு, ஜூன் 19: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பீகாரில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் மூளைக்காய்ச்சல் நோயினால் பலர் இறந்தனர். இதன்தாக்கம் தமிழகத்தில் இல்லாத நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது: கேரளாவில் பரவிய நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என்றாலும்  அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தாளவாடி, பர்கூர் உட்பட கேரளாவில் இருந்து தமிழகத்தில் வரும் பகுதிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இங்கிருந்து கேரளா, கர்நாடகாவிற்கு வேலைக்கு செல்பவர்களிடமும் காய்ச்சல், உள்ளிட்ட குறிப்பிட்ட பிரச்னை இருந்தால் அவர்களை கண்காணித்து வருகிறோம். கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இங்கு வேலைக்காக வந்து செல்வதாலும் நோய் பரவ வாய்ப்புள்ளதா என்பதற்காக அவர்களையும் கண்காணித்து வருகிறோம். மேலும், நிபா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: