காமதேனு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்

சத்தியமங்கலம், ஜூன் 19: சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை மாணவர்களுக்கு பட்ட வகுப்பு துவக்க விழா நேற்று கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் பெருமாள் சாமி தலைமை வகித்தார்.இணைச்செயலாளர் மலர்ச்செல்வி  வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் சோதனைகளை எவ்வாறு சாதனையாக மாற்றுவது குறித்தும், மனிதநேயப் பண்புகளை வளர்ப்பது குறித்தும், மாணவர்களிடம் இருக்க வேண்டிய சமுதாயப் பணிகள் குறித்தும், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடினஉழைப்பு இருந்தால் வாழ்வில் எளிதில் இலக்கை அடைய முடியும் என்றும், மாணவர்கள் தங்களை உருவாக்கிய பெற்றோர்களை எந்நாளும் காக்க வேண்டும் என பேசினார். முடிவில் முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: