நோய் தடுப்பு விழிப்புணர்வு

பாலக்காடு, ஜூன் 19:    பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி மலைகிராம பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மழைக்கால நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் செவிலியர்கள் வீடுவீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெல்லியாம்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் புதுப்பாடி, ஆனமடை பகுதியில் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் வீடுகளில் சுகாதார துறையினர் நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வீடுகளில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் தண்ணீர், தேங்காய்தொட்டிகளில் தேங்கும் தண்ணீர் போன்றவைகளில் கொசுக்கள் முட்டைப்போட்டு கொசு பெருகுவதை தடுப்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.   இதில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனையில் சென்று டாக்டர்களை பார்க்க வேண்டும் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: