×

பருத்தி குறைந்த விலைக்கு ஏலம் விவசாயிகள் சாலை மறியல்

சத்தியமங்கலம், ஜூன் 19:  சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. இந்த ஏலத்திற்கு சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, காவிலிபாளையம், அரசூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ.60 வரை ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் வியாபாரிகள் பருத்தியை கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை மட்டுமே விலை கேட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நேற்று நடந்த ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டது. பருத்தி குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளும், வியாபாரிகளும் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் முறைகேட்டில் கூறி சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : bidding ,
× RELATED சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில்...