யோகா தின விழிப்புணர்வு ஊர்வலம்

பாலக்காடு, ஜூன் 19:  பாலக்காட்டில் தேசிய யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.  தேசிய யோகத்தினம் ஜூன் 21ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி பாலக்காட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர். பாலக்காடு ஆயூஷ் துறை சார்பில் யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்காடு கோட்டை மைதானத்திலிருந்து பாலக்காடு அரசு ஆயுர்வேத மருத்துவமனை வரை நடந்தது. இந்த ஊர்வலத்தை பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகக்குழு சுகாதார கமிட்டி தலைவர் பினுமோள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலக்காடு டி.எம்.ஓ., டாக்டர் சிந்து, ஓமியோபதி மாவட்ட அதிகாரி சுமிதா உட்பட ஏராளமான மாணவ-மாணவியர்கள், செவிலியர்கள், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.

× RELATED குன்னூர் அருகே ஓடையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து