ரூ.21.13 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி, ஜூன் 19:   பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, அம்பராம்பாளையம். ஆழியார், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 114 விவசாயிகள் 631 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம்  முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.    இதில், முதல் தரம் 358 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.82.10 முதல் அதிகபட்சமாக ரூ.88.15 வரையிலும். இரண்டாம் தரம் 273 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.65.10 முதல் ரூ.68.15 வரையிலும் என விவசாயிகள் கொண்டு வந்த, 30 டன் கொப்பரை ரூ.21.13 லட்சத்துக்கு ஏலம்போனது. இதனை 11 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ரூ.1.78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்