×

புதிய பாடத்திட்டம் குறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை, ஜூன் 19: கோவை மாவட்டத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.  தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மற்றும் 7,8,10 மற்றும் பிளஸ் 2 ஆகிய 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.வரும் ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. இப்பயிற்சி கோவை அல்வேர்னியா பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று ஆங்கிலம், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டல அளவில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு இருந்தனர்.

Tags : masters ,
× RELATED சில்லி பாயின்ட்…