×

மாநகரில் சீரான குடிநீர் விநியோகம் சிறப்பு கண்காணிப்பு குழு நியமனம்

கோவை, ஜூன் 19:கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய கண்காணிப்பு குழு மற்றும் கள ஆய்வு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியதாவது,
சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை ற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தினார். அதன்படி கோவை மாநகராட்சி வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகளை கண்காணித்து , குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய செயற்பொறியாளர் தலைமையிலும், மண்டலங்களுக்கு நிர்வாகப் பொறியாளர் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வார்டு ஒன்றிற்கு ஒருவர் வீதம் 100 வார்டுகளுக்கும் 100 பேர் அடங்கிய கள ஆய்வுக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளம் பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், குடிநீர் ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த குழுவின் பணிகளை மேற்கொள்வார்கள். பொதுமக்களின் குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகப்பணிகளை  சிறப்பாக  மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில்  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை தொய்வில்லாமல்  மேற்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் குடிநீர் விநியோகம்  தொடர்பான புகார்களை,
மாநகராட்சி பிரதான அலுவலகம் - 0422 2302323
டி.ஜே.நகர் டேங்க் -0422 2572492
கணபதி எம்.எஸ்.ஆர் டேங்க் 0422 2511911
பாரதி பார்க் டேங்க் - 0422 2442236
காந்தி பார்க் டேங்க் - 0422- 2471009
சாரதா மில் டேங்க் - 0422- 2676700
புலியகுளம் டேங்க்  - 0422 2316267
கிழக்கு மண்டல அலுவலகம் -0422 2577056
மேற்கு மண்டல அலுவலகம் - 0422 2551700
வடக்கு மண்டல அலுவலகம் - 0422 2243133
தெற்கு மண்டல அலுவலகம் - 0422 2252481
மத்திய மண்டல அலுவலகம் - 0422 2215618
ஆகிய தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொண்டும் 8190000200 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர்  ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறினார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு