மின்சாரம் தாக்கி பண்ணை இல்ல மேலாளர் பலி

வானூர், ஜூன் 19: புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பூத்துறை கிராமத்தில் பண்ணை இல்லம் நடத்தி வருகிறார். இந்த பண்ணை இல்லத்தில் புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்ரமணியன்(44) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை அங்கிருந்த மின் மோட்டார் செயல்படாததால் அதனை சரிசெய்வதற்காக வெங்கடசுப்ரமணியன் சுவிட்சை போட்டுவிட்டு மின்மோட்டாரை கையால் தொட்டு பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயக்க நிலையை அடைந்தார். உடன் பணியாற்றியவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி அவர் இறந்தார். சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : farmhouse manager ,
× RELATED மின்சாரம் தாக்கி எஸ்ஐ பரிதாப பலி