விழுப்புரம் சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதின விழிப்புணர்வு

விழுப்புரம், ஜூன் 19: விழுப்புரம் சைல்டு லைன் சார்பில் அகில உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 12ம் தேதி) பவ்டா மைய நிறுவனம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் குணசேகர் தலைமை தாங்கினார். விழுப்புரம் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலெக்சிஸ் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பற்றி கூறினார். பவ்டா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி குழந்தைகள் பாதுகாப்பில் பவ்டாவின் திட்டங்கள் குறித்தும், பவ்டா சுகாதார அலுவலர் சாமுவேல் குழந்தைகள் கைகளை சுத்தமாக கழுவுவதின் அவசியம் பற்றி செயல்விளக்கம் செய்துகாட்டி சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பவ்டா விழுப்புரம் மண்டல உதவி பொதுமேலாளர் ஆனந்தவேலன், கிளை மேலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு கோஷங்கள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.Tags : Villupuram Childline ,
× RELATED இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது