காய்ந்து கருகி வரும் கரும்பு பயிர் கோமுகி சர்க்கரை ஆலையில் ஜூலை துவக்கத்தில் அரவையை துவக்க வேண்டும்

சின்னசேலம், ஜூன் 19: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1998ல் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மூக்கப்பன் முயற்சியால் முதல்வராக இருந்த கருணாநிதி கரும்பு அரவையை துவக்கி வைத்தார். அதன்பிறகு விவசாயிகள் நலன்கருதி கடந்த 2012-2013ல் சிறப்பு கரும்பு அரவைப்பருவமும் துவங்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலை இயங்குவதற்கான மின்சாரத்தை ஒப்பந்த அடிப்
படையில் காகித ஆலை நிறுவனம் நிலக்கரியை எரித்து நீராவி மின்சாரத்தை வழங்குகிறது. அதற்கு பதிலாக சர்க்கரை ஆலை நிறுவனம் காகிதம் தயாரிக்க தேவையான கரும்பு சக்கையை தருகிறது. இந்த கோமுகி சர்க்கரை ஆலையில் முதன்மை உற்பத்தியான சர்க்கரையுடன், கரும்பு சக்கை, கழிவுபாகு, கழிவு மண் போன்றவை கூடுதல் உற்பத்தி பொருளாக கிடைக்கிறது. இதனால் இந்த சர்க்கரை ஆலை பொதுவாக லாபகரமாகவே இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கரும்பு அரவையை துவக்கிய காலத்தில் இருந்து ஒரு கரும்பு அரவை பருவத்திற்கு சராசரியாக 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. இடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு விவசாயிகளின் நலன்கருதி சிறப்பு கரும்பு அரவையும் துவக்கி சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் கரும்பு அறுவடையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதைபோல இந்த ஆண்டும் பருவமழை பொய்த்துப்போனது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துபோனது. ஒரு பக்கம் கடும் வெப்பம், ஒரு பக்கம் கரும்பு வயலுக்கு பாசனம் செய்ய கிணற்றில் நீர் இல்லை. இதனால் கரும்பு ஓரளவுக்கு அறுவடைக்கு தயாரான நிலையில் வயல்கள் காய்ந்து கருகி வரு
கிறது. இதனால் வயலை உழுது, பார் அமைத்தல், நடவு கரும்பு வாங்கி நடவு செய்தல், உரமிடுதல், வறட்சியிலும் சொட்டு நீர் பாசனம் செய்தல், களையெடுத்தல் போன்ற பல்வேறு செலவுகளை செய்தும் பயனில்லாமல் போகும் நிலை உள்ளது. விவசாயிகளும் கடனாளியாகும் நிலையில் உள்ளனர். ஆகையால் ஆலை நிர்வாகம் ஓரளவு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள கரும்பு வயல்களை கணக்கெடுத்து அந்த வயல்களில் உள்ள கரும்பை சிறப்பு அரவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த சிறப்பு கரும்பு அரவையையும் ஜூலை மாத துவக்கத்திலேயே நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sugar plant ,Kumuku ,
× RELATED அனைத்து கிராமங்களுக்கும் 100% பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்