போதிய பேருந்து வசதி இல்லாததால் பேரங்கியூர் பள்ளி மாணவர்கள் அவதி

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 19: பேரங்கியூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரங்கியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி  உள்ளது. இப்பள்ளி ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  

இதில் பேரங்கியூர், கரடிப்பாக்கம், குச்சிபாளையம், பிடாகம், மேலமங்கலம்,  செம்மார், இருவேல்பட்டு, காரப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து படித்து செல்கின்றனர். இப்பகுதியில் படித்து வரும் மாணவர்கள் காலை, மாலை நேரங்

களில் டவுன் பஸ்சில்  வந்து செல்கின்றனர். டவுன் பஸ்சை தவிர வேறு எந்த பேருந்தும் பள்ளி  பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை.

இந்நிலையில் மாலை நேரங்களில் பள்ளி  முடிந்து வீட்டிற்கு செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள்  கூட்டமாக சாலையோரம் நின்று கொண்டு பேருந்துக்காக பல மணி நேரம் காத்து  கிடந்து பின்னர் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்சில் ஏறிச்செல்கின்றனர்.  

பள்ளி விடும் நேரத்தில் ஒரே பேருந்து மட்டுமே உள்ளதால் மாணவ, மாணவிகள்  முண்டியடித்து ஏறுகின்றனர். இருந்தும் பேருந்துக்குள் இடமின்றி படியில்  தொங்கியபடி ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர். சில நேரங்களில்  படியில் பயணித்துவரும் மாணவர்கள் சிலர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு  வருகிறது. இதனை தடுக்கும் வகையில்,  பள்ளி துவங்கி  முடியும் நேரத்தில் இந்த வழிதடத்தில் மேலும் ஒரு பேருந்தை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: