×

உலக இசை தின போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர், ஜூன் 19:  கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:உலக இசை தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடலூர் அரசு இசைப்பள்ளியில் இளைஞர்களுக்கான இசைப் போட்டிகள் இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் 15 வயது முதல் 30 வயது வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழிசை, கிராமியப் பாடல், முதன்மை கருவியிசை (நாதஸ்வரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டு வாத்தியம், கிளாரினெட் போன்றவை மற்றும் தாளக்கருவியிசை (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்கள் மட்டுமே பாடவோ அல்லது இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான இசைக் கருவிகளை அவரவர்களே கொண்டு வர வேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படும். போட்டிகளில் பங்கு பெறும் அனைவருக்கும், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரம் அறிய 04142-232021 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : matches ,World Music Day ,
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி