×

வெயிலில் கருகிய புடலங்காய் கொடிகள்

பண்ருட்டி, ஜூன் 19: பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு, கீழ்மாம்பட்டு, கருக்கை, விசூர் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் பல ஆண்டுகளாக அவரைக்காய், சுரைக்காய், புடலங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த செலவில் செய்யப்படும் இந்த விவசாய பயிர்கள் தினந்தோறும் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை சிறிதளவு காப்பாற்றி வந்தது. ஒவ்வொரு விவசாய குடும்பத்திலும் இதுபோன்ற சிறிய விவசாய பயிர்களை நம்பிதான் வாழ்ந்து வருகின்றனர். 100 ஏக்கருக்கு மேல் பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றிய கிராமங்களில் தோட்டப்பயிர் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக செழித்து வந்த விவசாயம் தண்ணீர் பிரச்னையால் புடலங்காய், சுரைக்காய், அவரை போன்ற கொடி பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதற்காக அமைத்த பந்தல் கொடி செலவுகள் கடன் வாங்கி அமைத்தவையாகும். இந்த வெயிலால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்