×

கலவரம் நடந்த ஊரில் கேள்விக்குறியான குழந்தைகளின் படிப்பு எஸ்.வலையப்பட்டி பெண்கள் மனு

மதுரை, ஜூன் 18: கலவரம் நடந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை உடனே மீண்டும் இயக்க வேண்டும் என அந்த ஊரை சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருமங்கலம் அருகே எஸ்.வலையப்பட்டியை சேர்ந்த பரணி அழகு, ஜோதி தலைமையில் 50க்கு மேற்பட்ட பெண்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் சாந்தகுமாரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘எங்களது சமூகத்திற்கும், மற்றொரு சமூகத்திற்கும் இடையே கடந்த 8ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் எங்கள் சமூகத்தை சேர்ந்த 78பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவத்திற்கு பிறகு ஊரில் ஆண்கள் யாரும் இல்லை. போலீசாருக்கு பயந்து அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
கிராமத்தில் பெண்கள் மட்டும் உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கள் குழந்தைகள் பள்ளியில் மேல்படிப்பு படிக்க முடியவில்லை. 8ம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ம் வகுப்பில் சேர முடியவில்லை. அதற்கு டிசி வாங்கி மேல்படிப்பில் சேர்த்துவிட ஆள் இல்லை. குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி விட்டது. உறவினர்கள் வருவதை கூட போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். எங்கள் கிராமத்திற்கு வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம்.
அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து குறைகளை கேட்டறிந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பஸ் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரியிருந்தனர். இதுகுறித்து தாசில்தார் விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.
குடிநீர் வராததால் மக்கள் எதிர்ப்பு

Tags : Student children ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...