* தளவாட சாமான்கள் பற்றாக்குறை மாநகராட்சி பெரும் ‘திண்டாட்டம்’ மதுரை நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறை வசதி

மதுரை, ஜூன் 18: மதுரை நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறை வசதி செய்யப்படும் என ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி மறைந்த மூத்த வக்கீல் சீனிவாசராகவன், முன்னாள் அரசு வக்கீல் டேனியல் மனோகரன் ஆகியோரது படத்திறப்பு விழா மதுரை வழக்கறிஞர் சங்கத்தில் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.

ஐகோர்ட் நீதிபதி ஜெ.நிஷாபானு, மறைந்த வக்கீல்களின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது, 300 பேரைக் கொண்டு துவக்கப்பட்ட இந்த அலுவலகம் 150ம் ஆண்டை நோக்கி செல்கிறது. எனவே, மதுரை வழக்கறிஞர்கள் பார் அலுவலகத்திற்கான தனி கட்டிடம் விரைவில் அமைக்கப்படும். இங்குள்ள பெண் வக்கீல்களுக்கான தனி அறையும் ஏற்படுத்தப்படும். இளம் வக்கீல்களுக்கான லாக்கர் அறையும் அமையவுள்ளது. வக்கீல்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார்.மறைந்த வக்கீல்களின் குடும்பத்தின் சார்பில் தலா ரூ.1 லட்சமும், நூலகர் சுரேந்திரன் சார்பில் ரூ.50 ஆயிரமும் சங்க நூலக வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி தாண்டவன், தலைமை குற்றவியல் நீதிபதி ேஹமானந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர் நாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories: