வரத்து குறைவால் உயர்வு முருங்கை கிலோ ரூ.26

ஒட்டன்சத்திரம், ஜூன் 18: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.26க்கு விற்பனையாகிறது.ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அம்மாபட்டி, இடையகோட்டை, ஜவ்வாதுபட்டி, கொத்தயம் மற்றும் ராமபுரம், செம்மடைப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் முருங்கை நடவு செய்துள்ளனர். தற்போது போதிய மழையின்மை, வறட்சி காரணமாக முருங்கை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் முருங்கை விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிலோ முருங்கை ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு கிலோ ரூ.26க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலிருந்து தினமும் முருங்கை கேரளா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: