வேடசந்தூரில் கருப்பு கலரில் வரும் காவிரி குடிநீர் மக்கள் குடிக்க முடியவில்லை

வேடசந்தூர், ஜூன் 18:  வேடசந்தூர் நகர் பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர் நகர் நேருஜி நகர், சாலைதெரு, வசந்தநகர் ஆகிய பகுதிகளுக்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் இருந்து நேருஜி நகர் பகுதிக்கு வரும் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. கழிவு மணல் மற்றும் கருப்பு கலரில் கழிவு நீர் கலந்தது போன்று தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை பேரூராட்சி அலுவலகத்தில் காண்பிக்க ெகாண்டு சென்றால், பேரூராட்சியில் செயல் அலுவலர் வெளியில் சென்று இருக்கிறார்; வந்தபின் சொல்லுங்கள் என்று பல நாள்களாக அலையவிடுகின்றனர். இதனால் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வேடசந்தூர் பகுதி முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ள நிலையில் கிடைக்கும் தண்ணீரை சுத்தமாக வழங்குவதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருகிறது. வேடசந்தூர் நகர் பகுதிக்கு வரும் தண்ணீரை சுத்தமாக வழங்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: