முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம், ஜூன் 18: நத்தம் அருகே பரளி-புதூரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. இதில் முதல் நாளன்று கிராம தெய்வங்களுக்கு கனி படைத்து மழை வேண்டி வழிபாடு செய்தனர். அன்று மாலை வத்திபட்டிக்கு சென்று அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக பரளி-புதூரை வந்தடைந்தது.தொடர்ந்து அன்றிரவு அம்மன் அங்கு எழுந்தருளிய பின்னர் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.

மறுநாள் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அக்கினிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் கிடாய் வெட்டுதல் நடந்தது. அன்று மாலையில் சர்வ அலங்காரத்தில் அதே பரிவாரங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பூஞ்சோலை சென்றடைந்தது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை பரளி-புதூர் கிராம பொதுமக்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீசாரும் செய்திருந்தனர்.

Related Stories: