திருவானைக்காவல் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் 30 வருடங்களாக சாலைவசதி இல்லை கலெக்டரிடம் மனு கொடுக்க தாம்பூலதட்டுடன் வந்த பொதுமக்கள்

திருச்சி, ஜூன் 18: திருச்சி மாநகராட்சி 29வது வார்டு அரியமங்கலம் அண்ணாநகரில் 30 வருடங்களாக சாலைவசதி இல்லததால் சாலைவசதி செய்துதரக்கோரி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினர் நேற்று தாம்பூல தட்டுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பொதுமக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் 10 பேர் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தனர்.

Advertising
Advertising

தப்பு அடித்தபடி, வெற்றிலைபாக்கு, பழம், பூக்கள் கொண்ட தாம்பூலத்தட்டில் மனுவை வைத்துக் கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் தாம்பூலத்தட்டுடன் உள்ளே செல்ல அனுமதிக்காததால், குறைதீர் கூட்டம் நடக்கும் வாயில்முன் தரையில் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து மனுவை மட்டும் கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘திருச்சி 29வது வார்டு அரியமங்கலம் அண்ணாநகரில் 30 வருடங்களாக சாலை வசதி இல்லை. இதனால் 1,500 குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறது. சாலை அமைக்க ரயில்வே இடம் வழங்க முன்வந்தும், அதிகத் தொகை என்ற காரணத்தை காட்டி மாநகராட்சி சாலை அமைக்க மறுத்து வருகிறது. எனவே சாலை அமைத்து தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் மண்ணச்சநல்லூர், இருங்களூர், காந்திநகரை சேர்ந்த ஜெகன்நாதன் அளித்த மனுவில், ‘இருங்களூரில் சர்வே எண் 427ல் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு சுமார் 3 ஏக்கருக்கு மேல் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்து அனுபவித்து வருகின்றனர். அதை மீட்டு காந்திநகரில் சொந்தவீடு இல்லாமல் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: