மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் புகார் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 18: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சிஐடியூ புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், புறநகர் மாவட்ட உள்ளாட்சி துறை ஊழியர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ராமசாமி, முருகசேன், சுப்ரமணி மற்றும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில், 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அனைத்து ஓஹெச்டி ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், நிலுவை தொகையை 1-10-17 முதல் வழங்கவும், நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்ய மாதம் ரூ.1000 வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத பென்சன் ரூ.2000 கிராஜுட்டி ரூ.50ஆயிரம் வழங்கவும், ஒப்பந்த முறை, சுயஉதவிகுழு மூலம் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்தி காலியிடங்களை நிரப்ப வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கவும், ஓய்வு பெறுபவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories: