நூதனமுறையில் பொதுமக்கள் கண்டனம் ஆடு மேய்க்க சவுதி சென்ற கணவரை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடியில் நல உதவி

திருச்சி, ஜூன் 18: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 623 மனுக்கள் குவிந்தன. மேலும் 62 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள், பாதுகாவலர் சான்று, தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானியம் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.1,44,15,449 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள் என மொத்தம் 623 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். டிஆர்ஓ சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: