துறையூரில் பரபரப்பு தரைக்கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்

திருச்சி, ஜூன் 18: திருச்சி என்எஸ்பி ரோடு தெப்பக்குளக்கரையில் தரைக்கடைகள் நடத்த அனுமதி அளிக்ககோரி 100க்கு மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.திருச்சி-தஞ்சை சாலை கிறிஸ்தவர்கள் கல்லறை பாதுகாப்பு சங்கம் தலைவரும், உலக மீட்பர் பசிலிக்கா பங்குத்தந்தை பாதரியார் அமல்ராஜ், செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க திரண்டு வந்தனர். கலெக்டர் சிவராசுவிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 1880ம் ஆண்டில் அப்போதைய ஆங்கிலேயே அரசின் ஆளுனர் திவான் கஞ்சமலை முதலியாரால் திருச்சி-தஞ்சை சாலையில் இடது புறத்தில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை அமைக்க இடம் ஒதுக்கித் தரப்பட்டு அங்கு கல்லறை அமைத்து பராமரித்து வருகிறோம்.கல்லறை அமைந்துள்ளதற்கான கல்வெட்டுகள், சிலுவை குறியீடுகள் மற்றும் இறந்தோர் புதைப்பதற்கான இடம் என 1935ம் ஆண்டு மாவட்ட புல வரைபடத்தில் உள்ளது. இந்நிலையில், கல்லறை, கோவில் இருந்ததற்கான குறியீடு விபரங்கள் ஆவணங்கள் மறைத்து நெடுஞ்சாலைத்துறையால் சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், சாலை மற்றும் வடிகால் பணிக்கு கல்லறை ஓரமாக போதிய இடமிருந்தும், கல்லறைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முற்படுகின்றனர். 3,000 குடும்பங்களுக்கு சொந்தமான கல்லறையை அகற்றக் கூடாது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கல்லறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Advertising
Advertising

இதேபோல் மனித நேய வர்த்தக நல சங்கத்தினர் மாவட்ட தலைவர் கபீர்அகமது தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், திருச்சி என்எஸ்பி ரோடு தெப்பக்குளக்கரையில் 400 தரைகடைகள் இருந்தது. இச்சங்கத்தில் 400பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

தரைக்கடைகளை மாநகராட்சி அகற்றிவிட்டது. இந்த வழக்கில் தரைக்கடை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சிவா, ஏஐடியூசி தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் உறையூர் பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு வீட்டுமனை அல்லது வீடு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

Related Stories: