கலெக்டரிடம் வியாபாரிகள் மனு தா.பேட்டை பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது

தா.பேட்டை, ஜூன் 18: தா.பேட்டை பகுதியில் நூதன முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் 2 லாரி மற்றும் கண்டெய்னர் பறிமுதல் செய்யப்பட்டது.முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க நேற்றுமுன்தினம் இரவு முசிறி போலீஸ் டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர்ம பொறுப்பு குருநாதன் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்ட எல்லையில் பவுத்திரம் அருகே உள்ள நீலியாம்பட்டி வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் உள்ளே காவிரி ஆற்று மணல் நிரப்பபட்டிருந்தது. மேலும் வாளசிராமணி கிராமத்தில் 2 டாரஸ் லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் தார்பாய் போட்டு கட்டப்பட்டிருந்த நிலையில் லாரிகளை சோதனையிட்டபோது இரண்டு லாரிகளிலும் காவிரி ஆற்று மணல் நிரப்பபட்டிருந்தது. ஆற்று மணல் அனுமதியின்றி திருடி வரப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரி டிரைவர் ஜம்புமடை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(28), அதன் உரிமையாளர் நாமக்கல் தனுஷ் பிரபு (32), டாரஸ் லாரி உரிமையாளர் தொட்டியம் மாதேஸ்வரன் (32), லாரி டிரைவர்கள் சிவக்குமார் (28), பிரபாகரன் (27) உள்ளிட்ட 5 பேரை போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி மற்றும் 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: