பிலோமினாள்புரம் முதல்தெருவில் சாக்கடைகால்வாய் அமைக்ககோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனு

திருச்சி, ஜூன் 18: திருச்சி தெற்கு காட்டூர் பாப்பாகுறிச்சி பிலோமினாள்புரம் முதல்தெருவில் சாக்கடைகால்வாய் அமைக்ககோரி மாநகராட்சி அலுவலகத்தில் கிராம நலக்குழுவினர் மனு கொடுத்தனர்.திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பாப்பாகுறிச்சியில் உள்ள பிலோமினாள்புரம் கிராம நலக்குழு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிலோமினாள்புரம் முதல் மற்றும் இரண்டாம் தெருவில் சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகளும், மாணவர்களும், வயதானவர்களும் என 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுநாள் வரை இந்த தெருவில் சாக்கடை கழிவுநீர் வெளியே செல்ல முறையான வழி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி மனைகளில் பெரிய குளம் போல் இருந்தது.

இதனைச்சுற்றிலும் பல வீடுகள் உள்ளன. ஆனால் தற்பொழுது கழிவுநீர் தெருவில்பாயும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதனால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா, மர்மகாய்ச்சல் போன்றவைகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்க்கூடிய மோசமான நிலையை கவனத்தில் கொண்டு பிலோமினாள்புரம் முதல்தெரு சாக்கடையின் கழிவுநீர் காலி மனைகளில் தேங்காமல் பாதுகாப்பான முறையில் வெளியே செல்ல புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: