குறைந்தபட்ச கூலி ரூ.625 வழங்கிடகோரி துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி, ஜூன் 18: துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ.625ஐ வழங்கிடகோரி சிஐடியூ துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியூ துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைட்பட்ச கூலி ரூ.625ஐ வழங்கிட கோரி திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் மாறன் தலைமை வகித்தார். இதில் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி ரூ 625 யை வழங்க வேண்டும். 56 மாதமாக பிடிக்கப்பட்ட இபிஎப் பணத்தை துப்புரவு தொழிலாளர்களின் இபிஎப் கணக்கில் உடன் வரவு வைக்க வேண்டும்.

துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் ரூ.1,200 பிடித்தம் செய்யும் கான்ட்ராக்டரின் ஒப்பந்த உரிமத்தை ரத்து வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அதனை ெதாடர்ந்து மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தனர்.அப்போது இதே ேகாரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். அதிகாரிகள் ஒன்றும் தெரியாததுபோல் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இது எங்களை தொழிலாளர்களை அவமதிப்பு செய்வதாக தெரிகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: