மும்மொழி கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18:

உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது. வட்டார செயலாளர் செந்தில்குமரன் வரவேற்றார். மாநில துணை செயலாளர் ஷேக்மூசா,  மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். அதில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மத்திய அரசின் மும்மொழி கொள்கையினை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள கூடாது. தமிழகத்தை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தான் இருக்க வேண்டும். தாய் மொழி தவிர்த்து விருப்ப மொழியாக வேண்டுமானால் எந்த மொழியாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியை திணிக்க கூடாது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், குமார், சங்கர், காந்தி, ஜோதிராமலிங்கம், ஜகாங்கீர், ஜீவரத்தினம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: