கெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்

கெங்கவல்லி, ஜூன் 18: கெங்கவல்லி அடுத்த தெடாவூரில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தெடாவூர் பேரூர் செயலாளர்  வேலு தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை முன்னிலை வகித்தார்.  

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தலைமை கழக பேச்சாளர் ஒப்பில்லாமணி, கூட்டத்தில் மறைந்து திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கௌதமன் சிகாமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற செய்த வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் செந்தாரபட்டி செயலாளர் முருகேசன், துரை, சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், பாலகிருஷ்ணன், ஜெகநாதன், காசி, முத்துகிருஷ்ணன்,  திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: