ஆத்தூரில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

ஆத்தூர், ஜூன் 18: ஆத்தூரில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள்  மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் தெரு முனை பொதுக்கூட்டம் பழைய  பேருந்து நிலையம், கோட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

ஆத்தூர்  பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, முன்னாள் நகர  இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். முன்னாள் நகர மன்ற  உறுப்பினர் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக முன்னாள்  எம்.பியும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான செல்வகணபதி கலந்து கொண்டு  பேசுகையில், ‘தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து  விட்டு, தன்னுடைய முதல்வர் பதவியும், ஆட்சியும் போதும் என்கிற எடப்பாடி  பழனிசாமியின் செயல்பாடுகளை கவனித்த தமிழக மக்கள், நாடாளுமன்ற  தேர்தலில் திமுகவுக்கு வாக்காளித்தனர்.
Advertising
Advertising

தமிழகத்திற்கு நல்ல விடிவுகாலம் விரைவில் வரும்,’  என்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, நகர  திமுக செயலாளர் பாலசுப்ரமணியம், முல்லை.பன்னீர்செல்வம், மணிகண்டன்,  ராமச்சந்திரன், உமா மகேஸ்வரி, ராஜா, முருக.கண்ணன்,  ராஜேந்திரன், துரை, சிவா, குமார், ராஜாமணி, ராஜசேகர், கமால்பாஷா, ரவி, சிவராமன், தாமரைச்செல்வன், சோலைகுமார்,  காசியம்மாள், சாந்தி, பூங்கொடி, ரூபி.நாகராஜன்,  சந்தோஷ்குமார், பழனிமுத்து, சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  லோகநாதன் நன்றி கூறினார்.

Related Stories: