இடைப்பாடி கடைகளில் 85 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

இடைப்பாடி, ஜூன் 18: இடைப்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள், பயன்பாட்டுக்கு வைத்திருந்த 85 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இடைப்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், பொறியாளர் முருகன் ஆகியோர் தலைமையில், துப்புரவு அலுவலர்கள் தங்கவேலு, முருகன், ஜான் விக்டர் பிரசாந்த் மற்றும் பணியாளர்கள், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட், ஜலகண்டாபுரம் ரோடு, தாவாந்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி, டீக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாட்டுக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 30 கடைகளில் 85 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமையாளர்களிடம் இருந்து ₹10 ஆயிரம் ஆபராதம் வசூலித்தனர். தடையை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் கேரிபேக் விற்பனை செய்தால், ₹25 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதுடன், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து சென்றனர்.

Related Stories: