கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

கிருஷ்ணகிரி, ஜூன் 18:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தொடர் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, நாளை (19ம் தேதி) மத்தூர் ஒன்றியத்திலும், 20ம் தேதி பர்கூர் பேரூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோ.வி.செழியன் எம்எல்ஏ பங்கேற்று பேசுகிறார். 22ம் தேதி காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் ஈரோடு இறைவன், 25ம் தேதி போச்சம்பள்ளி ஒன்றியத்தில் புதுக்கோட்டை விஜயா, 26ம் தேதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியத்தில் ஆரணி மாலா, 27ம் தேதி காவேரிப்பட்டணம் பேரூரில் நாஞ்சில் சம்பத், 28ம் தேதி ஊத்தங்கரை பேரூரில் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

இதே போல், 29ம் தேதி கிருஷ்ணகிரி நகரில் எ.வ.வேலு எம்எல்ஏ, 30ம் தேதி பர்கூர் ஒன்றியத்தில் குடியாத்தம் குமரன், ஜூலை 1ம் தேதி நாகரசம்பட்டி பேரூரில் சேலம் சுஜாதா, 2ம் தேதி ஊத்தங்கரை வடக்கு ஒன்றியத்தில் சைதை சாதிக், 3ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் பவானி கண்ணன், 4ம் தேதி மேற்கு ஒன்றியத்தில் கரூர் முரளி ஆகியோர் பேசுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பொதுக்கூட்டங்களை நடத்த கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : Karunanidhi Birthday Celebrations ,Eastern District ,
× RELATED கிழக்கு மாவட்டதிமுக செயற்குழு கூட்டம்