ஓசூரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் போராட்டம்

ஓசூர், ஜூன் 18: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ஓசூரில் நேற்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் தனசேகரன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு நாள் அடையாள வேலைறி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர் தனசேகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கொல்கத்தா மருத்துவமனை இளநிலை மருத்துவர் பரிபமுகர்ஜி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை தடுக்க, கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். அதை வலியுறுத்தவே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தோம்,’ என்றார். இந்த போராட்டத்தில், மருத்துவ சங்க துணை தலைவர் பிரதீப், செயலாளர் செந்தில், பொருளாளர் விவேக், மூத்த மருத்துவர்கள் சண்முகவேல், பாலசுப்ரமணியன், சுந்தராஜன், மற்றும் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.× RELATED போராடி தோற்றது வங்கதேசம்