பஸ்சில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி, ஜூன் 18: மத்தூர் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மத்தூர் கீழ்வீதியை சேர்ந்தவர் செல்வவினாயகம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஞானசவுந்தரி(39), போச்சம்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஞானசவுந்தரி சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு பேருந்தில் வீடு திரும்பினார். அப்போது, பையில் வைத்திருந்த பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், பர்ஸ் திருடுபோனதை அறிந்த ஞானசவுந்தரி, மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், திருடு போன பர்ஸில் 5பவுன் செயின், ₹5,500 மற்றும் செல்போன் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : theft ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம்...