வாலிபருடன் இளம்பெண் ஓட்டம் போலீசில் பெற்றோர் புகார்

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி பாரத்நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(35). இவரது மனைவி ராதிகா(24), கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கேஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடம் ஆகிறது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ராதிகா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, கிருஷ்ணன் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில், வேலூர் மாவட்டம் ஆசனம்பட்டு கிராமத்தை சேர்ந்த தோட்டன்(25) என்பவருடன், தனது மனைவி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
× RELATED குளச்சலில் பைக் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு