ஊழியர்களின் பணியை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி, ஜூன் 18:  புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன தலைமை அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர் முனுசாமி, செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு  மேலாக சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்து வரும் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்காமல், அவர்களது பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் புதுச்சேரி அரசின் செயலை கண்டித்து வருகிற 20, 21 ஆகிய இரு நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது என்றும், 21ம் தேதி மாலை 4.30 மணிக்கு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி முன்பு வாயிற்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், போராட்டத்தின் அடிப்படையில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கு எதிராக தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை அரசு கைவிட நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் 9ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை தலைமை செயலகம் முன்பு சம்மேளனம் மற்றும் அதனை இணைப்பு சங்கங்களின் ஆதரவோடு தர்ணா போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: