பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

புதுச்சேரி, ஜூன் 18:  புதுச்சேரி அரசு பட்ஜெட் கூட்டத்தை அடுத்தமாதம் முதல் வாரத்தில் கூட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 13ம் தேதி தனித்தனியாக அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள், நிதி பற்றாக்குறையால் பாதியில் நின்ற திட்டங்கள், மக்களை சென்றடையாத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் நராயணசாமி ஆலோசனை நடத்தினார். மேலும், என்னென்ன திட்டங்களை மக்களுக்கு செய்யலாம் என்று கருத்துக்களை கேட்டு அறிந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று சட்டசபை கமிட்டி அறையில் அமைச்சர் ஷாஜகான் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய், போக்குவரத்து, தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். இதில் அரசு செயலர்கள் அன்பரசு, பிரசாந்த் குமார் பாண்டா, ஸ்ரண், பத்மா ஜெய்ஸ்வால், பார்த்திபன், அபிஜித் விஜய் சவுத்ரி, மாவட்ட ஆட்சியர் அருண், தொழில்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வருவாய், போக்குவரத்து, தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், துறைகளுக்கு தேவையான நிதி, புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: