புதுவை பல்கலைக்கழகத்தில் 21ல் யோகா செயல்விளக்கம்

புதுச்சேரி, ஜூன் 18:   புதுவை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுவை பல்கலைக்கழகத்தில் 5வது அகில இந்திய யோகா தினம் வருகிற 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுவை பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை சார்பில் பல்கலைக்கழக வளாகத்திற்குள்  ராஜிவ்காந்தி கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கில் கடந்த 14ம் தேதி முதல் யோகா பயிற்சி முறைகள் குறித்த செயல்விளக்கம் நடந்து வருகின்றன. இந்நிலையில், பயிற்சி முகாமின் நிறைவு நாளான வருகிற 21ம் தேதி நடைபெற உள்ள அகில உலக யோகா தின கொண்டாட்டத்தில் துணைவேந்தர் குர்மீத் சிங்  தலைமை தாங்கி கூட்டு யோக பயிற்சியில் பங்கேற்க உள்ளார். இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், ராஜிவ் ரஞ்சன், பதிவாளர் சித்ரா, அனைத்து புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டு யோகா செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை இயக்குநர் சுல்தானா தலைமையில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர்களும், மாணவர்களும் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: