பிடிடிசி ஊழியர்கள் வாகன பிரசாரம்

புதுச்சேரி, ஜூன் 18:   புதுவை நோணாங்

குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் (பிடிடிசி) உதவி மேலாளராக ராஜசேகர் என்பவர் நியமிக்கப்பட்டதற்கு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த வாரம் பீச் ரோட்டில் தலைமை அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த பெரியகடை போலீசார், இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்ற நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து இப்பிரச்னையை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து பிடிடிசி ஊழியர்கள் நேற்று திடீரென வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பாலமோகனன், பாலசுப்பிரமணியன், பிரேமதாசன், ஆதிகணேசன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் மேலாளர் பதவி நியமனத்தில் நடந்த முறைகேடுகளை குறித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: