ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பட்டுக்கோட்டை, ஜூன் 18: பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கணேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் பங்கேற்று இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 122 பேர், மாணவிகள் 183 பேர் என மொத்தம் 305 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியிலில் பிலிட் தமிழ் மாணவி நந்தினி முதலிடமும், மாணவி இந்து நான்காமிடமும், மாணவி ஜனனி 7வது இடமும் பிடித்தனர். அதேபோல் பி.காம் மாணவி தீபிகா நான்காமிடமும், மாணவர் ரகு முதலிடமும், மாணவி துர்கா 14வது இடமும் பிடித்தனர். எம்எஸ்சி கம்ப்யூட்டர் அறிவியலில் மாணவி கவுளசல்யா 14வது இடத்தை பிடித்தார். இவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தங்கம், வெள்ளி பதக்கங்களை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.அதைதொடர்ந்து கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி உறுதிமொழியை வாசிக்க பட்டம் பெற்ற 305 மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தஞ்சை நகரில் வடக்கு அலங்கம், மேலஅலங்கம், செக்கடி, வடக்குவாசல், சீனிவாசபுரம், சேவப்பநாயக்கன் வாரிகளில் 50 ஆண்டுக்கும் மேலாக வசித்து மாநகராட்சிக்கு வரி செலுத்தி வரும் எங்களை அப்புறப்படுத்தவும், வீடுகளுக்கு உரிய இழப்பீடின்றி இடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழியாக சட்டத்துக்கு புறம்பான வகையில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Related Stories: